சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு.. ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் – முதலமைச்சர்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10%இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்தனர். 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் … Read more

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

அன்புத்தோழர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட். தமிழ் திரையுலகில் கடந்த 63 ஆண்டுகளாக தனது கலைப் பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து … Read more

பரந்தூர் விமான நிலையம் அவசியம் – தமிழ்நாடு அரசு

தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான … Read more

இது ‘திராவிட மாடல்’ அரசு அல்ல, ‘துரோக மாடல்’ அரசு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

திமுக அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை. ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ள மக்க விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் அளவுக்கு மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதேபோல், சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது … Read more

நெடுஞ்செழியன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்மொழி அறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல். தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் வயது (79) உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நெடுஞ்செழியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் … Read more

தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு!

சென்னையில் தேங்கிய மழைநீரை துரித நடவடிக்கை எடுத்து அகற்றிய முதல்வர், தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் கடந்த … Read more

45 கிலோ சந்தன கட்டைகள் நாகூர் தர்காவுக்கு இலவசம்.! தமிழக அரசு அரசாணை.!

கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வழங்கினார் முதலமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் சுந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாகத்திடம் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சசந்தனக்கட்டைகளை நாகூர் … Read more

சென்னையில் மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன்! – முதலமைச்சர் ஸ்டாலின்

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் உரை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வேலைவாய்ப்பு முகாம்கள் எனக்கு மனநிறைவை அளிக்கின்றன. 234 … Read more

இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக … Read more

இவர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர். பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறை, மின்சாதன மற்றும் இணைய வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்துதல் காலை … Read more