முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ?

முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் முதலமைச்சர் பழனிசாமி – எல்.முருகன் சந்திப்பு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே நேற்று நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் … Read more

கொரோனா நோய்ப் பரவல் – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை நடத்த உள்ளார். முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.இதற்கு இடையில்,தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். கடந்த சில நாட்களாக உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா … Read more

தமிழகத்தில் உதயமாகிறது மயிலாடுதுறை ! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று  துவக்கி வைக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையை தமிழகத்தின் 38வது மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா … Read more

நான் இன்று முதல்வராக இருக்கலாம் , நாளை நீங்களும் கூட ஆகலாம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதல்வராக இருக்கலாம்,பன்னீர்செல்வம் முதல்வராகலாம், நாளை நீங்களும் கூட ஆகலாம். இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சராகக் கூடிய ஒரே … Read more

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் – கே.பி.முனுசாமி பேச்சு

50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில் ,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்திய துணைகண்டத்தில் தமிழகத்திற்கு தனி வரலாறு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையை நிலையாட்டியவர் பெரியார். தொடர்ந்து பெரியாரால் பாடம்புகட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா.ஜெயலலிதா, … Read more

முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை..!

கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.இதற்கு இடையில்,தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். கடந்த சில நாட்களாக உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான … Read more

28-ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 28- ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது,வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் … Read more

ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம்  உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து 2 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று வெளியான அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரஜினியின் ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த … Read more

#BreakingNews : பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி  அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கியுள்ளார்.அந்த வகையில் சேலத்தில் இருப்பாளி என்ற பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் … Read more

இறைவனால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது – முதல்வர் பழனிசாமி பேச்சு

எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,நான் முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. சேலம் மாவட்டம் எடப்பாடியில் பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவியில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்பொழுது … Read more