31 C
Chennai
Saturday, March 6, 2021

முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ?

முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் முதலமைச்சர் பழனிசாமி – எல்.முருகன் சந்திப்பு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே நேற்று நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் ,கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news