யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம் – கே.பி முனுசாமி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம் – கே.பி முனுசாமி பேட்டியளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆதாலியூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி பேட்டியளித்துள்ளார். அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். இதில், யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம். புதிய கட்சி தொடங்கும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தான் அமைப்போம் என்கிறார்கள். புதிய கட்சி தொடங்குபவர்கள், கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று கூறுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் – கே.பி.முனுசாமி பேச்சு

50 ஆண்டு காலமாக எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிடமுடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில் ,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்திய துணைகண்டத்தில் தமிழகத்திற்கு தனி வரலாறு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையை நிலையாட்டியவர் பெரியார். தொடர்ந்து பெரியாரால் பாடம்புகட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா.ஜெயலலிதா, … Read more