#BREAKING: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

தேவைப்பட்டால் முழு ஊரடங்கு  நீடிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று செங்கல்பட்டில் HLL நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டேன். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் கிடங்கை ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில்  ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கி வைத்தேன். அனைவருக்கும் தடுப்பூசி … Read more

தடுப்பூசி உற்பத்தி.., முதலமைச்சர் ஆய்வு..!

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள HLL பயோடெக் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.  ரூபாய் 600 கோடி செலவில் தொடங்கப்பட்ட மையம் 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. … Read more

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம்.., மு.க.ஸ்டாலின் மாலை ஆய்வு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக … Read more

#BREAKING: அத்திவாசிய பொருட்கள் விநியோகம்.., மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனை தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன்,  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே  பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு … Read more

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள், பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர். இதுவரை ரூ.181 கோடி நிதி கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தினசரி கொரோனா தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.6 லட்சமாக அதிகரித்து இருப்பதாலும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை வாங்க இரண்டாவது கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். … Read more

40,000 குடும்பங்களுக்கு 12 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர்..!

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன்பொதுமுடக்கம் அமலாக்கவுள்ளது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் 40,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 12 வகையான நிவாரண மளிகைப் … Read more

#BREAKING: மீனவ குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை … Read more

ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் -முதல்வர் ..!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்  நிலையில், நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஒரு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் … Read more

#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..!

தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், மேலும், கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு … Read more

ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் -ஸ்டாலின் ..!

இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என முதல்வர் தெரிவித்தார். நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா ஒரு அளவுக்கு … Read more