#BREAKING: அத்திவாசிய பொருட்கள் விநியோகம்.., மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனை தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன்,  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே  பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.

நகரும் நேரக் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான பணிகளையும் முடக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளும் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை திறந்திருக்கும் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு விதமான சிரமமும் இன்றி இந்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

author avatar
murugan