40,000 குடும்பங்களுக்கு 12 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர்..!

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.

கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன்பொதுமுடக்கம் அமலாக்கவுள்ளது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் 40,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 12 வகையான நிவாரண மளிகைப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சரான பிறகு இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது  பலர் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

author avatar
murugan