மீண்டும் அழகிய முகத்தில் ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் கடந்த மாதம் வீக்கமான முகத்துடன் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, இப்போது அழகான பளிச் முகத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் சமீபத்தில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகியுள்ளார். இதனால் இவரின் முகம் வீக்கத்துடன் காணப்பட்டதால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், பல விமர்சனங்கள் இந்த புகைப்படத்தை குறித்து வெளிவந்தது.

இதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு அழகான பளிச் முகத்துடன் தனது புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முகம் எப்படி சரியானது என்ற கேள்விக்கு ரைசாவும்  விளக்கமளித்துள்ளார். புதிய தோல் சிகிச்சை கிளினிக் சென்று, அங்கு 5 வாரம் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார். இதனால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக ரைசா தெரிவித்துள்ளார்.