தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள், பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர். இதுவரை ரூ.181 கோடி நிதி கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினசரி கொரோனா தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.6 லட்சமாக அதிகரித்து இருப்பதாலும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை வாங்க இரண்டாவது கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.50 கோடி ஓதிக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube