பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது ஆம்பன்.!

சூப்பர் புயலான ஆம்பன் புயல், அதி தீவிர புயலாக வலுவிழந்து தற்பொழுது மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது.  வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு … Read more

இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதால் காரணமாக, மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு உள்தமிழகத்திலிருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தளவில் வானம் மேகமுத்ததுடன் காணப்படும் எனவும், நகரில் சில இடங்களில் லேசான … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை-சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் காலையில் வாட்டிவதைத்த வெயில் மாலை 4 மணி முதல் நல்ல கனமழை பெய்தது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .இதனைத்தொடர்ந்து … Read more

சென்னையில் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்துவருகிறது .இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே சென்னை மாநகரில் காலையில் வெயில் வாட்டி வதைத்து ஆனால் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.மழையானது வடபழனி ,நுங்கம்பாக்கம் ,ராயப்பேட்டை ,தியாகராய நகர் ,கோடம்பாக்கம் ,அண்ணா சாலையில் மழை பெய்தது . கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது .வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக … Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்

கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .  

சென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்

தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது . நேற்று இரவு சென்னையில் நல்ல கனமழை பெய்தது மற்ற மாவட்டங்களில் ,மிதமான மழை பெய்து வருகிறது .அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கடலூர் ,விழுப்புரம் ,திருச்சி ,மதுரை ,திருவாரூர் ,சிவகங்கை,சேலம் ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை … Read more

வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது . சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். வேலூர், காஞ்சிபுரம். திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.