50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு – உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்ட மத்திய அரசு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச … Read more

இன்று முதல் இந்த 10 மாவட்ட நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.!

கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் மார்ச் 26-ம் தேதி முதல் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டது. முக்கிய வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரிக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன்  ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர், தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள … Read more

உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று  தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் … Read more

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்..!

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினப்பிருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய … Read more

BREAKING: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.!

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான  கால அவகாசத்தை ஜூலை31-ம் தேதி வரை தள்ளிவைக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதாக தகவல் … Read more

ஆன்லைன் மதுபானம் விற்பனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு.!

ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து 43 நாள்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்   நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி வழங்கியது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மனு தொடரப்பட்டது. … Read more

பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு ரூ.25000அபராதம்- காரணம் என்ன ?

பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.அவரது வழக்கில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கூட நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை அமைக்க நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் … Read more

#BREAKING :உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறையை ரத்து.!

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, புதுச்சேரி கிழமை நீதிமன்றங்களில் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தமைலையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில்  உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை ரத்து என்று  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை, புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் கோடை விடுமுறை ரத்து ,மே 1 முதல் 31-ம் தேதி வரை அறிவித்த கோடை விடுமுறை  நிறுத்தி வைப்பு என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன்  அறிவித்துள்ளார். இதனால் … Read more

BREAKING :தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் முறையீடு.!

இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் நேரடியாக பொதுமக்களுக்கு  உதவிகளை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது. தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி நோய் தொற்றுக்கு வழி வகுப்பது தவிர்க்க வேண்டும் . சமைத்த உணவுகள் நிவாரணப் பொருள்களை … Read more

முந்தைய காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக ஸ்டெர்லைட் குற்றவாளியாக்க முடியாது -ஸ்டெர்லைட் தரப்பில் வாதம்.!

ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை  இன்று முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.  முந்தைய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடைபெற்றது. போரட்டம் வன்முறை வெடித்தது இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக … Read more