ஆன்லைன் மதுபானம் விற்பனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு.!

ஆன்லைன் மதுபானம் விற்பனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு.!

ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து 43 நாள்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்   நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி வழங்கியது.

ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மனு தொடரப்பட்டது.  அந்த  மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என அறிவித்தது.

இந்த, உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube