EIA அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு மேல்முறையீடு

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து … Read more

50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு – உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்ட மத்திய அரசு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச … Read more

கொரோனா எதிர்த்துப் போராட ..ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி.!

இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை. இந்நிலையில், மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும்  ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த கடந்த மே 29-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன்  கடந்த 1-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

தமிழகத்திற்கு 907.75 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு.!

தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், கொரோனா தடுப்பு மருதத்துவ உபகரணங்களை வாங்க 3,000 கோடி தேவைப்படுகிறது. கொரோனாவை தடுக்கவும், பொருளாதார … Read more

ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீடு -மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து   மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக … Read more

#BREAKING: தமிழகத்தில் சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478.79 கோடி – மத்திய அரசு.!

தமிழகத்திற்கு ரூ.478.79 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.  சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.4,000 கோடி ஒதுக்கியது. அதில், தமிழகத்திற்கு ரூ.478.79 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம், தமிழகத்தில் 1.76 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு – மத்திய அரசு.!

மத்திய அரசு  14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது, கொரோனா நெருக்கடியின் போது அவர்களுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மருத்துவ நிபுணர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி!

வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சத்தால் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்பொழுது வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சிறப்பு விசாக்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி.!

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை … Read more

சென்னையில் 5-ம் கட்ட ஊரடங்கு! கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுகிறதா? – மத்திய அரசு திட்டம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 4-ம் காட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 5-ம் காட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், … Read more