மத்திய அரசு அறிவிப்பு – 75 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.!

இதுவரை 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். அந்த காட்சிகள் தினந்தோறும் … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப அனுமதி – மத்திய அரசு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகம் திருப்புவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டன. இந்நிலையில், இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசர தேவைக்கு தாயகம் திரும்ப அனுமதி … Read more

பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.!

ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 … Read more

மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்  தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் … Read more

மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை – ராகுல் காந்தி

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் குறித்தும் பொது முடக்கம் பற்றியும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனிமையாக … Read more

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது.!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பொது முடக்கத்தை மே … Read more

ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு மருந்து கண்டுபிடிப்பதும், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதும் மிக அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே காணொலிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா தொடர்பான தகவலை … Read more

அதிர்ச்சி செய்தி.! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்.!

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு  ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். தற்போது  17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம்  4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், … Read more

BREAKING:தமிழகத்திற்கு மேலும் 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இந்தியாவில் 14000 தாண்டியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறிய இந்தியா , சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது. தற்போது முதற்கட்டமாக நேற்று முன்தினம்  3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரிசோதனை விரைவாக மேற்கொள்ள சீனாவில் இருந்து கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளில்  தமிழகத்திற்கு மத்திய அரசு  12,000 … Read more

மத்திய அரசு அறிவிப்பு .! மாநிலங்களுக்கு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்தியாவில் 5865 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் அதிகமாக மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பாதித்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு, ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ரூ .11,092 கோடியை ஒதுக்கியது. அந்த நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு பணம் ஒதுக்காமல் மாறாக மக்கள் தொகையை அடிப்படையாக … Read more