கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட இளம் கர்ப்பிணி உயிரிழப்பு.!

பெங்களுருவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு 33 வயது கர்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார். பெங்களுருவில் ப்ரீத்தி என்ற 33 வயது கர்ப்பிணிப்பெண், கணவன் இல்லாத சமயம் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிச-10 ஆம் தேதி மருத்துவ பரிசோதனையின்போது கருத்தரித்திருப்பதை அறிந்த தம்பதிகள், ஏற்கனவே 11 மாத ஆண்குழந்தையை வளர்த்து வருகின்றனர். முதல் குழந்தை ஏற்கனவே கைக்குழந்தையாக இருப்பதால், இரண்டாவது கரு உண்டாகியிருப்பது பிடிக்காத ப்ரீத்தி, கணவனிடம் கருவை கலைக்கலாம் என்று கூறியிருக்கிறார், ஆனால் கணவனோ அதற்கு சம்மதிக்கவில்லை. … Read more

பெங்களூருவில் பரபரப்பு.! கன்னட கொடிக்கு தீவைத்த வட இந்தியர்.! போலீசார் அதிரடி கைது.!

பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட கொடிக்கு தீ வைத்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரூ, பரங்கி பாளையத்தில் கன்னட கொடிக்குத் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இந்த நபர் வட இந்தியாவைச் சேர்ந்த அமிர்தேஷ் என  போலீசார் கண்டறிந்திருந்தனர். அமிர்தேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு 10 மணிக்கு கன்னட கோடிக்கு தீ வைத்து எரித்ததை பார்த்த மக்கள் அவரை தடுத்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்தனர். பின்னர் தகவல் அறிந்து … Read more

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி.!

சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் நாட்டின் 5 ஆவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுரு கே.எஸ்.ஆர். ரயில்வே நிலையத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் முக்கிய அம்சங்களாவன, கட்டணமாக 1,200 இலுருந்து 2,486 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயண நேரம் சென்னை-மைசூரு 500 கி.மீ தொலைவை 6 மணி 30 நிமிடம் … Read more

3 இடங்களில் அதிரடி சோதனை.! போலீசாரிடம் சிக்கிய 1580 கிலோ செம்மர கட்டைகள்.!

பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பெங்களுருவில் மஹாலக்ஷ்மி லே அவுட் போலீசார், 3 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சோதனையின் முடிவில் 1,580 கிலோ செம்மர சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர். ஏற்கனவே பெங்களூரு போலீஸ் கடந்த மாதம் ஒரு கும்பலிடம் 730 கிலோ சந்தனக்கட்டைகள் மற்றும் 147 லிட்டர் … Read more

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ சேவைகளை நிறுத்த உத்தரவு…

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த உத்தரவு. பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான … Read more

பெங்களுரூவில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் சேதம்.. ரூ.337 கோடி இழப்பு!

பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 397 கி.மீ சாலைகள் சேதமடைந்ததால் ₹337 கோடி இழப்பு. பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 397 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட ரூ.337 கோடி மதிப்பிலான சேதத்தை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிபிஎம்பியின் படி, மூன்று கிலோமீட்டர் வரையிலான நடைபாதைகள் சேதமடைந்து ₹4 கோடி இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் போது 7,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 170 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மகாதேவபுரா பகுதி மிக … Read more

குழந்தை திருமணம்: 46 வயது மணமகன், 14 வயது மணமகளின் பெற்றோர் கைது..

பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி … Read more

ஜே.சி.பியில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்… பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.! பதிலடி கொடுத்த சமூக ஆர்வலர்.!

பெங்களூருவில் ஜி.சி.பி எந்திரத்தில் வேலைக்கு சென்ற ஐடி ஊழியர்களை டிவிட்டரில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா. அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர்.  கர்நாடக தலைநகர் பெங்களூருவில், இதுவரை வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில், நேற்று மட்டுமே 130 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாய் இருக்கிறது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் டிராக்டர், ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தி தாங்கள் … Read more

பெங்களூரு மழை: வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல்!!

பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, ​​சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன. “பருவமழை தொடர்ந்து நகரின் … Read more

பெங்களூரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

BWSSB பம்பிங் ஸ்டேஷன் நீரில் மூழ்கியதால் பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் 2 நாட்களுக்கு நிறுத்தப்படும். கனமழை காரணமாக கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய (BWSSB) நீரேற்று நிலையம் நீரில் மூழ்கியது. அதனால் காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருவுக்கு குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களுக்கு பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கன மழைக்குப் பிறகு சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தெருக்களில் படகுகள் மூலம் … Read more