இறந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

தேனியில் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்ட உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.  தாமரைக் குளத்தை சேர்ந்த பிளவேந்திர ராஜா, ஆரோக்கியமேரி தம்பதியருக்கு ஆறு மாதத்தில், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு  தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெற்றோரை அழைத்து குழந்தையை பிளாஸ்டிக் பாக்கெட்டில் … Read more

#BREAKING : மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மேலும் ஒரு குழந்தை மீட்பு…! போலீசார் தீவிர விசாரணை…!

மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால்  உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட … Read more

மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு…!

மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  அசாருதீன் என்பவர், மேலூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவரது இரண்டு மகள்கள் ஒரு மகன் ஆகியோரை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அதில், ஜூன் 13-ஆம் தேதி ஐஸ்வர்யாவின் ஒரு … Read more

அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், … Read more

அசாமில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை…! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…!

அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை … Read more

பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் கைது!

பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் உட்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி குருகிராமிலுள்ள நாராயணா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி கோவிந்த் குமார் மற்றும் அவரது மனைவி பூஜா தேவி ஆகியோருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தை இல்லாத தம்பதியினர் ஒருவருக்கு தங்களது குழந்தையை விற்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அதன் பின்பு குழந்தை பிறந்த … Read more

ஆறு மணி நேர அறுவை சிகிச்சை…! ஒரு வயது குழந்தையின் 3-வது காலை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்…!

ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது. இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து … Read more

கீழடி அகழாய்வின் போது முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு…!

மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் கடலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில், முதுமயள் தாலி, எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என தொடர்ச்சியாக … Read more

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை…!

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் முதல் அலையில், முதியவர்களை தான் அதிகமாக பாதித்தது. பின் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரே பெரிதும் பாதித்தது. தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது … Read more

தொடரும் அலட்சியம்…! ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது குழந்தை…!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை. குழந்தையை மீட்கும் பணி தீவிரம். சமீப காலமாக ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அலட்சியமாக மூடாமல் விடுவதால், குழந்தைகள் இந்த கிணற்றிற்குள் விழும் சம்பவங்கள் நடக்கிறது. அதிகரிகாரிகள் இது தொடர்பாக எச்சரித்து வந்தாலும், சிலர் அலட்சியப்போக்காக தான் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஆழ்துளை கிணறு … Read more