கீழடி அகழாய்வின் போது முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு…!

மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் கடலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில், முதுமயள் தாலி, எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என தொடர்ச்சியாக … Read more

அதிர்ச்சி சம்பவம்..கொரோனா மையமாக மாற்றப்பட்ட கல்லூரியில் ஆண் எலும்புக்கூடு..!

வாரணாசியில் கொரோனா மையமாக மாற்றப்பட்ட கல்லூரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியின் கான்ட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின்  வகுப்பறைக்குள் ஒரு எலும்புக்கூட்டை கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், போலீசாரும், தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்தவர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தடயவியல் குழு பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.கே.சிங் கூறுகையில், கல்லூரி வளாகத்தின் பின்னால் ஏராளமான புதர்கள் இருப்பதாகவும், அங்கு விளையாட்டு மைதானம் கட்ட முடிவு … Read more

5000 ஆண்டு பழமையான திமிங்கல எலும்புக் கூடு தாய்லாந்தில் கண்டுபிடிப்பு.!

தாய்லாந்தில் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான 39 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டுபிடித்த இந்த திமிங்கலம் பிரைடின் வகையை சேர்ந்தவை என்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரின் மேற்கே உள்ள சாமுத் சாகோனில் கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13-28 டன் எடை வரை வளரக்கூடிய பிரைடின் திமிங்கலங்கள் உலகளவில் வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதமான கடல்களில் வாழ்கின்றன, அவை இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் காணப்படுகின்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் … Read more

முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் எலும்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது.

கொந்தகை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் எலும்புக்கூடுகள்.. மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கீழடி, கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. கொந்தகைகயில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 5 குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முதுமக்கள் தாளிகளும் கண்டெடுக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து … Read more

கூட்ட நெரிசல் இல்லாமல் செல்ல எலும்புக்கூடுடன் காரில் பயணம் செய்த முதியவர்.!

அமெரிக்காவில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால் அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர். 62 வயது மதிப்புத்தாக்க முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணம் செய்ய தன்னுடைய காருக்குள் எலும்புக்கூடு ஒன்றிற்கு தொப்பி போட்டு காரை ஓட்டி சென்று உள்ளார். அமெரிக்காவில் தற்போது ஒரு சில மாகாணங்களில் உள்ள சாலைகளில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால்அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர். அந்த … Read more

4000 வருடத்துக்கு முன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு கல்லறை ஒரு காதல் ஜோடி!

கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள்  ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவர்கள் அப்பகுதியில் ஒரு கல்லறையை தோண்டினர்.அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தது. அந்த இரண்டு எலும்பு கூடுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.இரண்டு எலும்பு கூடுகளுக்கு  அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.மேலும் ஒரு எலும்பு கூடு அருகில் வளையல்கள் தங்க மோதிரங்கள் இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16,17 வயது உடையவர்களின் … Read more

எலும்புக்கூடாக கண்டுபிடிக்கபட்ட மாணவி ” பலாத்காரம் செய்து கொலை ” விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த … Read more