கீழடி அகழாய்வின் போது முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு…!

  • மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் கடலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில், முதுமயள் தாலி, எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழர் நாகரீகத்தின் தாய்மாடி என போற்றப்படும் கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த எலும்புக் கூட்டிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வண்ணம் தொல்லியல் துறையினர் கவனமாக பராமரித்து வரும் நிலையில், குழந்தையின் எலும்புக்கூடு  மொத்தம் 95 சென்டிமீட்டர் நீளமும், அதன் தலை 20 சென்டிமீட்டர் யிருப்பதாகவும் கூறப்படுகிறது. டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னரே எலும்புக்கூடுகளின் காலம் என்பது தெரியவரும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.