முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

Andaman and Nicobar Islands - The Shompen

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் மட்டும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது. தமிழகம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவுகள் , அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் என சேர்த்து 21 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், அந்தமான் நிகோபார் தீவுகளில் … Read more

#Breaking:வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்;இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. அசானி புயல்: மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில்: இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

அதிகாலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்..!

அந்தமான் நிகோபார் போர்ட் பிளேர் பகுதியில் இருந்து 165 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. அந்தமான் நிகோபாரில் அதிகாலையில் போர்ட்பிளேரின் தென்கிழக்கில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது உயிர்சேதமோ , பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. Earthquake of Magnitude:4.3, Occurred on 29-12-2021, 05:31:05 IST, Lat: 10.26 & Long: 93.34, … Read more

#Breaking:அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ..!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நடுத்தர மற்றும் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் இன்று  6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.என்சிஎஸ் படி,காலை 6:27 மணிக்கு போர்ட்பிளேயரில் ஏற்கனவே 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில்,தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஒரு மணி நேரம் கழித்து ஏற்பட்டுள்ளது.இருப்பினும்,பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் – பிரதமர் மோடி ட்வீட்

அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று பிரதமர் மோடி  தொடங்கி வைக்கிறார். இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,அந்தமான் நிகோபரில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று விசேஷமான நாள். அந்தமான் … Read more