உங்களுக்கு மட்டும்தான் அடாவடி செய்யத் தெரியுமா? எங்களுக்கும் அடாவடி செய்யத்தெரியும்?

தமிழகத்தில் தற்போது நேர்மறையன அரசியல் வரவேண்டும். எதிர்மறை அரசியலுக்கு இனி வாய்ப்பு இல்லை என  தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டம் நடத்துகிறீர்கள். நடத்துங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை கிடையாது. ஆனால், தமிழகத்திற்குள் ரதம் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இந்து மீதும் இந்து மதத்தை மதிப்பவர்கள் மீதும் நீங்கள் … Read more

சசிகலா பிரமாணப்பத்திரத்தில் பரபரப்பு தகவல்!ஜெயலலிதா சிகிச்சைக்கு மறுத்து வந்தார் …..

சசிகலா  ஜெயலலிதாவின் அனுமதியுடன் அவ்வப்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை வீடியோ பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், 2015 மற்றும் 2016ம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் தான் வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நான்கு முறை வீடியோ பதிவு செய்ததாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். அனைத்து வீடியோக்களும் ஜெயலலிதாவின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா தான் தனது … Read more

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  648 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் முழுவதும்  ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த ஈடுபட்ட 648 பேர் கைது செய்யப்பட்டனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராம ராஜ்ய ரத யாத்திரை நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைப்பெற்றது. அதேபோன்று தலைமைச் செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் … Read more

கர்நாடகா மாநிலம் மங்களூரு தேவாலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி   மங்களூரு சென்றுள்ள அங்குள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றார். ரொசாரியோ தேவாலயம் சென்ற ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்ததலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோரும் ராகுல் காந்தியுடன் சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதனைத் தோடர்ந்து கோகர்நானதேஸ்வரர் கோவிலுக்கும் சென்று ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னை அருகே  மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

நேற்று சென்னையில் தலைமைச் செயலகம் அருகே  மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் பழனிசாமி அளித்த பதிலை ஏற்க மறுத்து, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். முழக்கமிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தனபால் , சமாதானம் செய்ய முயற்சித்தார். அவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!இதோ …

தினமும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.21​-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கோவையில் பாஜகவினர் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு !

மர்ம நபர்கள் கோவையில் பாஜக பிரமுகரின் காரை  பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காமிராவை கைப்பற்றி சிங்காநல்லூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில், கோவை செல்வபுரம் பகுதியில் உமாபதி என்பவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கும் மர்ம … Read more

மீண்டும் மோடியே பிரதமராவார்!

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் , அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராவார் என தெரிவித்தார். மதவாத கருத்துக்கள் கூறும் பாஜக தலைவர்கள் அதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து லோக் ஜனசக்தி விலகும் என கூறப்பட்டது. இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பஸ்வான் தெரிவித்ததாவது: பாஜக தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, லோக் ஜனசக்தி கட்சி … Read more

மதுரைக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வந்தது ராமர் ரதம்!

அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமர் ரதம் தமிழக அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே  5 மாநிலங்களைக் கடந்து தமிழகத்தை வந்தடைந்தது. நேற்று தென்காசி வந்த அந்த ரதம், பின்னர் மதுரைக்கு வந்து சேர்ந்தது. இன்று ராமேஸ்வரத்தை வந்தடையும் ரதயாத்திரை, நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் செல்ல உள்ளது. விஷ்வ இந்து பரிசத்தின் இந்த ரதயாத்திரை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடைபெறுகிறது. வழிநெடுக ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ராமர் ரதத்தை வரவேற்று தீப ஆராதனைகள் … Read more

17 பேர் குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி இன்று நேரில் ஆய்வு!

அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக  நாளை விசாரணையைத் தொடங்க உள்ளார். குரங்கணி பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா இன்று போடி செல்கிறார். விபத்துக்கான  சூழ்நிலை, டிரக்கிங் ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் தவறுகள், டிரெக்கிங்குக்கு அனுமதி தொடர்பான வனத்துறை விதிகள் உள்ளிட்டவை குறித்து நாளை முதல் அவர் விசாரணை … Read more