வெளியானது ஷங்கரின் '2.O' படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக  இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், படத்தில் சில காட்சிகள் என பிரமாண்டமாக வீடியோ … Read more

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் தமிழர்களுக்கு இசைப்புயல் தரும் சர்ப்ரைஸ்!

தளபதி விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தமிழர்களின் பாரம்பரிய இசை பற்றியும், அதன் வரலாற்று பிண்ணனி பற்றியும் வீடியோ தொகுப்பை வெளியிட உள்ளார். DINASUVADU

செம ஸ்டைலாக வெளியான தளபதியின் மூன்றாவது லுக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை SUN பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் விஜயின் லுக் செம மாஸாக இருந்தது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இன்னும் ஸ்டைல் ஆக தளபதி இருக்கிறார். அதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து … Read more

சிம்டாங்காரன் வெளியாகி சாதனைகள் செய்தாலும் ரசிகர்களுக்குள் இருக்கும் வருத்தம்!

திங்களன்று மாலை தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் இருந்து சிம்ட்டாங்காரன் என்ற  ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. இது வெளியான சில மணி நேரத்தில் தளபதி ரசிகர்களால் பல சாதனைகளை செய்தது. ஆனாலும் இந்த பாடல் அதிகமாக விஜய் ரசிகர்களால் விரும்பபடவில்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்க்கு பாடலின் வரிகள் புரியாதபடி அமைந்திருந்தன. அதிலும் மியூசிக் இது ரகுமான் இசையா என சந்தேகிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதில் சில ரகுமான் ரசிகர்கள், அவர் பாடலை … Read more

எனது கதாபாத்திரம் இதுதான்! உண்மையை போட்டுடைத்த அருண் விஜய்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் நடித்த அருண் விஜய் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும்போது தனது கேரக்டரை பற்றியும் கூறியுள்ளார். அதாவது தியாகு(அருண் விஜய்) நன்கு படித்தவன், துபாயில் பெரிய முதலாளிகளுடன் டீல் பேசுபவன்,  கதையில் இன்ட்ரஷ்டிங்கான ரோல் என தனது கதாபாத்திரத்தை கூறியுள்ளார். DINASUVADU

விவேகம் சாதனையை தூக்கி அடித்த சிம்டங்காரன்! சர்காரின் யு டியூப் ரெகார்டஸ்!!

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விவேகம் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த சர்வைவா பாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடல் இதுவரை யு டியூபில் 3 லட்சம் பேர் லைக்ஸ் அள்ளியது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படத்தில் இருந்து சிங்கள் ட்ராக் சிம்டங்காரன் எனும் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இப்பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 3 லட்சம் … Read more

வெளியான 20 நிமிடத்தில் சிம்டாங்காரனின் பெரிய சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தளபதி விஜய்  நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்குவெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது. இந்த பாடல் வெளிவந்த சில நிமிடங்களிலே பல சாதனைகள் செய்தது. அதிலும் குறிப்பாக வெளியான ஒரு சில நிமிடங்களிலே 5 லட்சம் ஹிட்ஸை கடந்துவிட்டது. 20 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இன்னும் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க உள்ளதோ? அது … Read more

சன் நெக்ஸ்ட் ஆப்பில் சர்கார் பாடல் நிறுத்தப்பட்டதா?! : ரசிகர்கள் அட்டகாசம்!!

தளபதி விஜய்  நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது. இது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடபட்டது. இது கரெக்டா 5 மணிக்கு அந்த ஆப்பில் வெளியாகும் என … Read more

மெர்சல் தளபதிக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் மெர்சல். இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா (IARA) என்ற விருது வழங்கும் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்க்கு சிறந்த சர்வதேச நடிகருக்கான வருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் … Read more

நாளையும் சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்! சன் பிக்ச்சர்ஸ் அதிரடி தகவல்!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இய்க்த்தில் உருவாகிவரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்தது. மேலும்.இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் செப்டம்பர் 24இல் வெளியாகும் என இன்று அறிவிக்கபட்டிருந்தது. தற்போது தயாரிப்பு நிறுவனம்.ஓர்.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் நாளை சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. DINASUVADU