மும்பையில் மெகாபிளாக் அறிவிப்பு..! டிசம்பர் 11 வரை ரயில் சேவை பாதிக்கப்படும் ..!

மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மும்பையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகாரணங்களை பராமரிப்பதற்காக மேற்கு ரயில்வே “மெகா பிளாக்” அறிவித்துள்ளது. இந்த தடையால் மும்பையின் மத்திய மற்றும் மேற்கு வழித்தடங்களில் நாளை ரயில் சேவைகள் பாதிக்கப்படும். போரிவ்லி மற்றும் கோரேகான் ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 10:35 மணி முதல் 3:35 வரை பாதைகளில் ஐந்து மணிநேரம் தடைகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் … Read more

மும்பையில் எலக்ட்ரிக் பிரீமியம் பேருந்துகள் இயக்கம்.! பெஸ்ட் நிறுவனத்தின் புதிய சேவை..!

பெஸ்ட் நிறுவனமானது பாந்த்ரா மற்றும் தானே இடையே பிரீமியம் பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவனமானது (BEST) தனது பிரீமியம் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையானது, குளிர்சாதனம் மற்றும் குறைந்த மாசுகளை வெளியேற்றும் நான்கு மின்சார பேருந்துகள், பாந்த்ரா மற்றும் தானே வழியே இயக்கப்பட்டு சொகுசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. மும்பை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேலும் 200 மின்சார பேருந்துகளைக் இயக்க பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையால் இந்தியாவின் முதல் … Read more

ரயிலில் உடமைகளை தொலைத்த பெண்.. கண்டுகொள்ளாத ரயில்வே… 2 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்.!

லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  2015இல் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ரணக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது அந்த பெண்ணின் உடமைகள் திருடப்பட்டது. பெண் உடனே டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அவர் தொலைத்த உடமைகளில் உடைகள் தவிர்த்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பஷ்மினா சால்வை உட்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!

மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் … Read more

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 வயது சிறுவன் பரிதாப பலி..

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் … Read more

5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.  இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் … Read more

ரூ.15 கோடி மதிப்புள்ள கோகோயினை தனது வயிற்றில் கடத்திய நபர் கைது!

மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 116 கோகோயின் துண்டுகளை விழுங்கி கடத்த முயன்ற நபர் கைது. மும்பையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள கோகோயின் அடைக்கப்பட்ட 116 துண்டுகளை விழுங்கி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட காங்கோ நாட்டவர்(51) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் 115 துண்டுகளை மலம் வழியாக எடுத்ததாகவும், ஒன்று மட்டும் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி அறுவை … Read more

மும்பையில் 22,000 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல்.!

மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த 22 ஆயிரம் கிலோ ஹெராயின் வகை போதை பொருளை டெல்லி சிறப்பு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  மும்பையில் உள்ள, நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த பெரும் அளவிலான ஹெராயின் போதை பொருள் போலீசார் வசம் சிக்கியுள்ளது, டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னரில் கடத்த இருந்த 22 ஆயிரம் கிலோ அளவில் ஹெராயின் வகை போதை … Read more

பூனைகளுக்கு கருத்தடை செய்ய ₹1 கோடியை ஒதுக்கீடு!

மும்பையில் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகவைத்தால், பூனைகளுக்கு கருத்தடை செய்ய பிஎம்சி ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மும்பையின் பல பகுதிகளில் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கருத்தடை செய்வதன் மூலம் பூனைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்த பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) முடிவு செய்துள்ளது. கருத்தடை திட்டத்திற்கு குடிமை அமைப்பு ₹1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மற்றும் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் பூனை அச்சுறுத்தல் தொடர்பாக குடிமக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல்-கைமா மற்றும் மும்பை இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது..

செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது. தினசரி விமானம் மும்பையிலிருந்து இரவு 11 மணிக்கு (இந்திய உள்ளூர் நேரம்) புறப்பட்டு, அதிகாலை 12.35 மணிக்கு ( ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் நேரம்) ராஸ் அல்-கைமாவில் தரையிறங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பும் விமானம் ராஸ் அல்-கைமாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் … Read more