மும்பையில் எலக்ட்ரிக் பிரீமியம் பேருந்துகள் இயக்கம்.! பெஸ்ட் நிறுவனத்தின் புதிய சேவை..!

பெஸ்ட் நிறுவனமானது பாந்த்ரா மற்றும் தானே இடையே பிரீமியம் பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது.

மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவனமானது (BEST) தனது பிரீமியம் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையானது, குளிர்சாதனம் மற்றும் குறைந்த மாசுகளை வெளியேற்றும் நான்கு மின்சார பேருந்துகள், பாந்த்ரா மற்றும் தானே வழியே இயக்கப்பட்டு சொகுசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேலும் 200 மின்சார பேருந்துகளைக் இயக்க பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையால் இந்தியாவின் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் கொண்ட நகரமாக மும்பை உள்ளது.

மேலும் பயணிகள் இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை பெஸ்ட்ன் சாலோ (Chalo) செயலி மூலம் பதிவு செய்யலாம். இந்த பேருந்தில் பாந்த்ரா ஸ்டேஷனில் இருந்து பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்க்கு (BKC) செல்வதற்கான கட்டணம் ரூ.50, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் தானே இடையே செல்வதற்கான எக்ஸ்பிரஸ் ரூட் கட்டணம் ₹205 ஆகும்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment