ரயிலில் உடமைகளை தொலைத்த பெண்.. கண்டுகொள்ளாத ரயில்வே… 2 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்.!

லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

2015இல் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ரணக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது அந்த பெண்ணின் உடமைகள் திருடப்பட்டது. பெண் உடனே டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அவர் தொலைத்த உடமைகளில் உடைகள் தவிர்த்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பஷ்மினா சால்வை உட்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் இது குறித்து காவல் துறையில் புகாரளித்த போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர்  நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த மனுவை ஆராய்ந்த ஆணையம் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்னிற்கு மன வேதனை மற்றும் வழக்குச் செலவுக்காக  ரூ.30,000 வழங்கவும் உத்தரவிட்டது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment