5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். 

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.

அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2017ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இதனை ஆரம்பித்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் பேசுகையில், ‘ 5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும். இந்த 5ஜி சேவை, கிராம மக்கள் வரையில் அனைவரும் பயனளிக்கும்.

5ஜி மூலம் பல புதிய வேலை வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கும். டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம்.’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment