தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு? – மநீம

மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு … Read more

மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா..? – கே.பி.முனுசாமி

சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றம்சாட்டும் திமுக, மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா? என கே.பி.முனுசாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் … Read more

நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை … Read more

#BREAKING : அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர்..!

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்துள்ளார். டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் … Read more