இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்..! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு…!

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு  பிறப்பித்துள்ளார். சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த கூட்டத்தில், உரையாற்றிய முதல்வர், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு … Read more

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒருசில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று அரசு மருத்துவமனைகளில் மருந்து, … Read more

கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள் என முதல்வர் ட்வீட்.  செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது  பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து,  … Read more

முதல்வர் தந்தை வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

முதல்வர் தந்தை வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்து வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 39 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளதாக மக்கள் … Read more

மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது – முதல்வர் மு.க ஸ்டாலின்!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என முதல்வர் பெருமை. சென்னை மருத்துவ கல்லூரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு தனி மையம் தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கை தூக்கிவிட கூடிய அரசுதான் திமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய … Read more

ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடக்கூடிய அரசு தான் திமுக அரசு. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆணைப்புளி மரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, புராதன சின்னமாக விளங்கும் ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டையும், அதன்பின் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், ஒருவாரம் … Read more