தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒருசில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுருந்த, இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment