ராகுல் காந்தியின் டி-சர்ட் ரூ. 41 ஆயிரம்!! பிரதமரின் உடை ரூ.10 லட்சம்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் மூன்றாவது நாளான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது. விலையுயர்ந்த ஆடையின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு பதிலளித்த காங்கிரஸ், “ஏன், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பயமா? வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் … Read more

#Justnow:திமுக அரசுக்கு கண்டனம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.அந்த வகையில்,அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை,”புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு.அதைப் போல பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக … Read more

#Breaking:குடியரசுத் தலைவர் தேர்தல் – 14 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைத்த பாஜக!

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக,எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக … Read more

நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!

டெல்லி:நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கிய நிலையில்,நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால் விவசாயிகள், … Read more

“இவர்கள் நமது தூதர்கள்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு”- அண்ணாமலை!

சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது.ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால்,பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால்,பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் … Read more