இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள்..! கருப்பு மை கொண்டு அழிப்பு..!திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் புதிய கல்வி கொள்கையை குறித்து கடும் விவாதாம் நாடு முழுவதும் எழுந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டனங்களையும் மற்றும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ள  தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை கருப்பு வண்ணம் கொண்டு அழிக்கப்பட்டது. அதே போல் அஞ்சல் அலுவலகம் மற்றும் திருச்சி விமான நிலையத்திற்கு வெளியில் … Read more

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் உபயநாச்சியார்களுடன்..!! நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக … Read more

11 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். மணப்பாறை அருகேயுள்ள புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி அவ்வூர் திடலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 496 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை லாவகமாக பிடித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

திருச்சி:சமயபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை..! பலி பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது..!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை 23 மணி நேரத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கோவில் யானை மசினி, நேற்று பாகனை ஆலய வளாகத்திலேயே மிதித்துக் கொன்றது. இதையடுத்து கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது.கோயிலில் பாகன் உயிரிழந்ததால் கோயில் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள எட்டு திசையிலும் பலி பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியஹாசனம், வாஸ்துசாந்தி, உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இருந்தும் கோயிலில் பக்தர்கள் … Read more

திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததில்…பாகன் பலி..!!

திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில்  யானை  தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது. திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக … Read more

பித்ரு தோஷமா கவலையை விடுங்க.!! இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க..!!

பித்ரு தோஷம் இருந்தால் வேலை கிடைப்பதில் தாமதம்,திருமண தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மணைவிக்கிடையே பிரச்சணை , மன அமைதியின்மை   போன்ற பிரச்சனைகள் எல்லாம் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது. முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டுமே  தெய்வத்தை வணங்கும் நமக்கு பலன் கிடைக்கும் இல்லை என்றால் அவற்றை நம் முன்னோர்களே தடுத்துவிடுகின்றன இதனால் தன் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் பொண்ணுக்கு திருமணம் ஆகல,குழந்தை இல்லை என பல குறைகள் … Read more

பள்ளிக்குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட ஆய்வை வெறும் சம்பிரதாய விழாவாக நடத்த நினைக்கிறீர்களா? மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் காட்டம்..!

திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன் என்று? வட்டார போக்குவரத்து அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், வியாழக்கிழமை நடைபெற்றது. கருமண்டபம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணிகளை ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்த ஆட்சியர், அதில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாததைக் கண்டு … Read more