திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment