ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை – டொனால்ட் டிரம்ப்

எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை … Read more

எலான் மஸ்க்கை பாராட்டிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்”முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின் கணக்கை ரத்து செய்ததால் ஏற்பட்ட அவருக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய” வலியுறுத்தினார். 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்திற்குப் பிறகு டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரை எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டியதோடு,”ட்விட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் … Read more

குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டவரும் இனி கிரீன் கார்டுகளைப் பெறலாம்..

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க … Read more

அவர்களை விட நான் தான் இந்தியாவின் நண்பன்.! மோடி மிக சிறந்த மனிதர்.! டொனால்ட் டிரம்ப் புகழாரம்.!

முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி.  அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் இந்தியாயவுடனான உறவு குறித்தும் பேசியிருந்தார். அப்போது கூறுகையில், இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் நல்ல நட்புறவு இருக்கிறது. முந்தைய அமெரிக்க அதிபர் … Read more

வெள்ளை மாளிகையில் மார்க் ஜுக்கர்பெர்குடன் இரவு உணவு! கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட டிரம்ப்!

கடந்த வாரம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளை மாளிகைக்கு இரவு உணவிற்கு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், டொனால்ட் டிரம்ப், “மார்க் ஜுக்கர்பெர்க் அற்புதமானவர். இரவு முழுவதும் என்னை முத்தமிட்டார்.’ நான் உங்களை விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை கூறினார். அதன்பிறகு ட்விட்டர் பயனர்கள் டொனால்ட் டிரம்ப் 2021 ஜனவரியில் 45 … Read more

எனது ட்விட்டர் கணக்கு திரும்ப தொடங்கப்பட்டாலும் நான் அதை உபயோகிக்கப்போவதில்லை – டிரம்ப் அதிரடி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சமூக வலைத்தளமாகிய ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கை உலகின் நம்பர் 1 பணக்காரராகிய எலன் மஸ்க் அவர்கள் வாங்கியுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்கள், ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டாலும் தான் மீண்டும் ட்விட்டருக்கு … Read more