ஜெய் பீம் பட தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவிட நீதிமன்றம் உத்தரவு ..!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த … Read more

94-வது ஆஸ்கர் விருது பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமானது, கடந்த சில தினங்களுக்கு முன்பதாக,  இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், 94-வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் … Read more

வரலாறு படைத்த ஜெய் பீம் : ஆஸ்கார் யூடியூப் தளத்தில் சூர்யாவின் ஜெய் பீம் …!

ஆஸ்கார் யூடியூப் தளத்தில் சூர்யாவின் ஜெய் பீம் பட காட்சி பதிவேற்றப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் ஜெய்பீம். கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகிய இந்த படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடக் கூடிய வழக்கறிஞராக … Read more

ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றாலும், சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படக்குழுவினருக்கு, சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ஜெய்பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததாக பாராட்டினார். … Read more

ஐஎம்டிபி தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் …!

ஐஎம்டிபி தரவரிசையில் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஞானவேல் தாஸ் அவர்களது இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமாகிய ஜெய் பீம் பழங்குடியின மக்கள் காவல்துறையினரால்  அனுபவித்த கொடுமைகள் குறித்த கருத்துக்களை கொண்டிருக்கும். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பலராலும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சினிமா தகவல்களை கொண்ட புகழ் பெற்ற தளமாகிய ஐஎம்டிபியிலும் ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. ஹாலிவுட் … Read more

நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் பட குழுவினரை பாராட்டிய நல்லகண்ணு..! புகைப்படம் உள்ளே..!

இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் … Read more

மீண்டும் சிக்கலில் ‘ஜெய் பீம்’ – வன்னியர் சங்கம் சார்பில் வழக்கு!

கடலூர்:ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் … Read more

ஜெய் பீம் : இயக்குனர் ஞானவேல் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் – சீமான்

ஜெய் பீம்’ படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்கள் அறிக்கை … Read more

#BREAKING : வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ‘ஜெய் பீம்’ பட இயக்குனர்..! நடந்தது என்ன?

‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் அவர்கள் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ் நிலம் எப்போதும் நல்ல … Read more

‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ – சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, … Read more