கோவையை குலைநடுங்க வைத்த கொலை.! ஆண் நண்பர்களுடன் கள்ளக்காதலி கைது.! போலீசாருக்கு ரொக்க பரிசு.!

கோவை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் வழக்கில், முக்கிய குற்றவாளி பிரபுவின் கள்ளக்காதலி கவிதா எனபதும், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் குப்பை தொட்டியில் ஒரு மனிதரின் கை மட்டும் 6 நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. அதனை கொண்டு விசாரிக்கையில், இது கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரின் கை என்பது தெரியவந்துள்ளளது. மேற்கொண்டு … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டினால் 1000.! வீடியோ எடுத்தால் 500.! ஊராட்சி மன்ற தலைவி அதிரடி.!

பொது இடங்களில் குப்பை கொட்டினால், 1000 ரூபாய் அபராதம். அதனை ஆதாரத்துடன் வீடியோ எடுத்து காட்டினால் வீடியோ எடுத்த நபருக்கு சன்மானமாக 500 வழங்கப்படும் என காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி அறிவித்துள்ளார்.   கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே, காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின் சூப்பர் ஐடியாவால் அந்த தெருவே சுத்தமாக மாறியுள்ளது. காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி காயத்திரி பாலகிருஷ்ணன் , அண்மையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சியில் ஒரு சில வார்டில் மட்டும் ஒரு … Read more

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு…!

கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனீ, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதியவர்களை குறிவைத்து கொள்ளை.. வசமாக பிடிபட்ட இன்ஸ்டா காதல் ஜோடி… கோவையில் துணிகரம்.!

கோயம்புத்தூர் மாவட்டம்,வடவள்ளி நகரம் அருகே, இருக்கும் பம்மனாம்பாளையத்தில், தனியாக வசித்து வந்த 80 வயது முதியவர் பெரிய ராயப்பன் எனும் நபரை கட்டிப்போட்டு ஒரு காதல் ஜோடி வீட்டில் கொள்ளையடித்து தப்பிக்க முயற்சித்து பிடிபட்டுள்ளனர்.  அதாவது, பெரிய ராயப்பன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் தனியாக இருப்பதை புத்தகம் விற்கும் சாக்கில் நோட்டம் விட்ட காதல் ஜோடிகளான,  23 வயதான … Read more

விடாத அடைமழை… 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.!

நேற்றை போல, இன்றும் வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவைக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே  அதிகமான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை எப்போது தான் தீருமோ என பொதுமக்களும் பார்த்து வருகின்றனர். அனால் விடாத கனமழை தொடர்ந்து பெய்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில்,  தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, … Read more

தமிழத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….

நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது … Read more

என் குழந்தைக்கு ஜாதி கிடையாது.! கோவை தம்பதியின் அசத்தல் நகர்வு.!

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். 33-வயதான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு விமலா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதிகள் “வில்மா சாதி, மதம் சாராதவர்” என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர். தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது சாதி சான்றிதழில் அவர்கள் எந்த … Read more

கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  கோவையில், ஈரோடு, திருப்பூர், கோவை  தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக … Read more

உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவையில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவையில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் இன்று (ஏப்ரல் 22) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில்  1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் #Savesoil டி-சர்ட்களை அணிந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும், அங்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து … Read more

“கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்” – பாஜகவின் குஷ்பு கண்டனம்!

கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து,இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி … Read more