பொது இடங்களில் குப்பை கொட்டினால் 1000.! வீடியோ எடுத்தால் 500.! ஊராட்சி மன்ற தலைவி அதிரடி.!

பொது இடங்களில் குப்பை கொட்டினால், 1000 ரூபாய் அபராதம். அதனை ஆதாரத்துடன் வீடியோ எடுத்து காட்டினால் வீடியோ எடுத்த நபருக்கு சன்மானமாக 500 வழங்கப்படும் என காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி அறிவித்துள்ளார்.  

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே, காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின் சூப்பர் ஐடியாவால் அந்த தெருவே சுத்தமாக மாறியுள்ளது.

காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி காயத்திரி பாலகிருஷ்ணன் , அண்மையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சியில் ஒரு சில வார்டில் மட்டும் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

அதாவது, பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது. அதனை மீறி கொட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே போல அப்படி குப்பை கொட்டுபவர்களை சரியாக வீடியோ எடுத்து ஆதாரத்துடன் நிரூபித்தால், வீடியோ எடுத்தவருக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டார்.

இதனால், அந்த வார்டு பகுதிகள் சுத்தமாக மாறிவிட்டன. அதனால், மற்ற வார்டுகளுக்கும் அதே திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளாராம் ஊராட்சி மன்ற தலைவி காயத்ரி பாலகிருஷ்ணன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment