கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

கோவையில், ஈரோடு, திருப்பூர், கோவை  தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை.

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம் என தெரிவித்துள்ளார். மேலும், உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது. கோவையை மேம்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும். கயிறு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு மையம் கோவையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment