வெள்ளை சட்டை.., பொன்னாடை.., முதலமைச்சருடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு.!

நடிகர் விஜய் “பீஸ்ட்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் ஷாம்,சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு,ஜெயசுதா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரக்ள்.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நடிகர் விஜய்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here