10 சதவீத இட ஒதுக்கீடு.! தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு.!

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உயர்பிரிவு வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக … Read more

10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் – காங்கிரஸ் கட்சி வரவேற்பு

10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்பு.  10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது  10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து … Read more

அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகத்தினர் முழு வீச்சில் உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் … Read more

யாருக்காக இதெல்லாம்..? எதை மூடி மறைக்க..? – கே.எஸ்.அழகிரி

பாலம் புனரமைத்த கம்பெனியின் பெயர் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோர்பி கேபிள் … Read more

அண்ணாமலை மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது – கே.எஸ்.அழகிரி

மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்ற போது, அவர்களை பார்த்து, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். அன்னமலை இந்த பேச்சு தற்போது பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் … Read more

பிரதமர் மோடி இதை செய்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் – கே.எஸ்.அழகிரி

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை என கே.எஸ்.அழகிரி ட்விட். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, … Read more

மோடி, அமித்ஷாவை போல ராஜீவ் காந்தி கூறியதில்லை.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி.!

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.  நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக … Read more

தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

8 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பாஜக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கிறது.  தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், 22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது; தமிழக அரசின் கோரிக்கையை … Read more

ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் – கே.எஸ்.அழகிரி

ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து குறித்து கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று … Read more

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் – தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் அகில இந்திய … Read more