10 சதவீத இட ஒதுக்கீடு.! தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு.!

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

உயர்பிரிவு வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். தேசிய அளவில் இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என அவர் குறிப்பிட்டுளார்.

அதாவது, 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால், இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல திமுக கூட்டணி காட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய அளவில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment