உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா .. ! மின்சாதன உபகரணங்களை வாங்க 53 மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!

ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி)  … Read more

ரஷ்யா அடுத்தடுத்த தாக்குதல்.! உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிப்பு.!

ரஷ்யா மேலும் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு. உக்ரேனிய எரிவாயு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் மின்சார கட்டடம் தாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான உக்ரரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார். போருக்கு முன் உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடுமையாக … Read more

உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் … Read more

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.  ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், … Read more

ஐநாவில் ரகசிய வாக்கெடுப்பு விவகாரம்.! ரஷ்யாவுக்கு எதிரான வாக்களித்த இந்தியா.!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை … Read more

கிரிமியா பாலம் தகர்ப்பு.! மீண்டும் ருத்ர தாண்டவமாடும் ரஷ்யா.! உருக்குலைந்து நிற்கும் உக்ரைன்.!

கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா … Read more

உக்ரைன் நாட்டுப் பகுதிகள் நாளை ரஷ்யாவுடன் இணைப்பு.! புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பகுதிகள் நாளை அதிகாரபூர்வமாக ரஷ்யா வசம் செல்வதற்கான நிகழ்ச்சி நாளை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் அதற்கான அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திட உள்ளார்.   உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய 4 பகுதிகளை ரஷ்யா தன்வசமாக்க உள்ளது. இது சம்பந்தமான உறுதியான அறிக்கையில் நாளை … Read more

ரஷ்யா பிடியிலிருந்த தமிழர்களை காப்பாற்றிய உக்ரைன்..

ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் 3 மாத காலம் ரஷ்யா பிடியில் சித்திரவதை அனுபவித்த தமிழர்களை உக்ரைன் காப்பாற்றியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரானது பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உக்ரைனுக்கு துணையாக அமெரிக்கா உதவி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யா … Read more

உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தால் மட்டும் போர் முடிந்து விடாது… துருக்கி கருத்து.!

ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து.  உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான். இதனால்,  பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா. இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை… மத்திய அரசு அதிரடி.!

உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது.  உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் மூண்ட போது, உக்ரன் நாட்டில் பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் அவராவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு இங்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க … Read more