கார்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு !

கார்ட்டூனிஸ்ட் பாலா, பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு.சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக போராடிய பத்திரிகையாளர்கள் சங்கத்தை  மற்றும் பாலா மீது வழக்கு பதிவு.                                                                      … Read more

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக ஆறு நீதிபதிகள் நியமனம். விரைவில் இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்று வைக்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதிலகம், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ராஜமாணிக்கம், பொங்கியப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.

செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

  செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு  3000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நிரந்தர வேலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு.

ஆர்.கே நகர் தேர்தல் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நாளை வேட்புமனு!

ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம்  தமிழர் கட்சி  சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கலைகொட்டுதயம் அவர்கள் நாளை   காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்   சீமான்  முன்னிலையில் வேட்புமனு  பதிவு செய்கிறார்.

செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

  செவிலியர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க விடாமல் மிரட்டும் போக்கை காவல்துறை மூலம் பின்பற்றக் கூடாது என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்                                                                        … Read more

தூத்துக்குடி அருகே புன்னக்காயலில் டால்பின்கள் இறப்புக்கு DCW ஆலை கழிவுகள் தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய  சாபக்கேடான சாகுபுரம் DCW ஆலையின் பின்புறம் உள்ள புன்னக்காயல் கடல் பகுதியில் தான் அந்த ஆலையின்  கழிவுகள் கலக்கப்படுகின்றது. குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில்  நல்ல மழை பொழிந்தது.இதனால்  DCW ஆலையில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவு கழிவுகள் கடலில் கலக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.DCW ஆலை கழிவுகளுக்கும்,இன்று புன்னக்காயல் கடல் பகுதியில் டால்பின்கள் இறந்ததற்கும் ஆலையின் கழிவுகள் தான் காரணம்  என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் அரசு உப்புநிறுவனத்தை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்…

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் லாபம் குவிக்கும் ரிபைனரி பிரிவை தனியாருக்கு தாரை வார்க்கும் நிர்வாக முடிவை எதிர்த்து நேற்று  ஆலை முன்பு உப்பள தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு உப்பு நிறுவனத்தின் 5500 ஏக்கர் உப்பளங்களையும், தமிழக உப்பு சந்தையையும் கார்பரேட் டாடாவுக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட சதியை முறியடிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம்  (CITU) நடத்தினர்.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பிஜேபி தலைவர்களின் இருவேறு நிலைபாடு…!!

“கமலஹாசனுக்கு அரசியலுக்கு வருவதற்கான தகுதியே இல்லை”. – ஹெச்.ராஜா . “கமல் அரசியலுக்கு வந்து எங்களுடன் கை கோர்ப்பாரேயானால் நாங்கள் அதனை வரவேற்போம்” – தமிழிசை சவுந்திராஜன் . இருவருமே நேற்று பேசியதுதான்.

குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம்..!

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் இதுவரை 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தையின் பெயரிலையே அருகில் உள்ள அஞ்சலகங்களில் … Read more