பிரதமர் மோடி இதை செய்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் – கே.எஸ்.அழகிரி

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை என கே.எஸ்.அழகிரி ட்விட். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, … Read more

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு 3 நாள் தீபாவளி விடுமுறை.!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 24 முதல் 26 வரையில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை யாத்திரை, தமிழகம் மற்றும் கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 500 கிமீ தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற இருந்த இந்த ஒற்றுமை யாத்திரைக்கு 3 நாள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. … Read more

என்னுடன் போட்டியிட்ட சசிதரூர் உடன் கட்சி குறித்து ஆலோசித்தேன்.! காங் தலைவர் கார்கே பேட்டி.!

தலைவர் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்ட சசிதரூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சசிதரூராரை நான் நேரில் சந்தித்து கட்சியை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து ஆலோசனை நடத்தினேன். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று தேர்தல் ரிசல்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று அவரது … Read more

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தான் கட்சியில் உச்சபட்ச அதிகாரம்.! ராகுல்காந்தி கருத்து.!

காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ‘என தெரிவித்தார். அவரே கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். – காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கருத்து. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 7897 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1072 வாக்குகளே பெற்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு, நேரு குடும்பத்தை சாரத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே … Read more

24 ஆண்டுகளுக்கு பின் காந்தி-நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு..!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, மல்லிகார்ஜுனே கார்கே தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் … Read more

கார்கே, நேரு- காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவார் என்ற கருத்து தவறானது – ஜோதிமணி எம்.பி

காங், தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாக்குகள் பதிவாகியுள்ளன. சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே  தலைவராக … Read more

புதிய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே.? வெற்றி வாய்ப்பு பிரகாசம்.!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிற நிலவரம் வெளியாகியுள்ளது.   காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7000 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் … Read more

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் – சோனியாகநதி

இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என  கேட்டனர். அதற்கு … Read more

மோடி, அமித்ஷாவை போல ராஜீவ் காந்தி கூறியதில்லை.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி.!

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.  நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக … Read more

இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வ பெருந்தகை

மழை குறவர் மக்களுக்கு மலைவாழ் சாதி சான்றிதழ் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை வலியுறுத்தல்.  காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை. மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் … Read more