ஆன்மீக பயணத்தில் அரசியல் வேண்டாம் .!நிரூபர்களின் கேள்விக்கு பதில் அளிக்க ரஜினிகாந்த் மறுப்பு.?

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார்.இது அவரது ஆன்மீக பயணம்.அரசியல் அல்ல என்றும் கூறினார்.

அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏன் எங்கு போனாலும் கூடவே வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் திராவிட நாடு தொடர்பாக கேள்வி கேட்ட போது, இது அரசியல் கேள்வி என்றும் இதற்கு பதில் அளிக்க முடியாது என்றும் கூறி விட்டு ரஜினிகாந்த் புறப்பட்டார்.ஆன்மீக பயணத்தில் அரசியல் வேண்டாம் என்று கூறினார்.

Rajinikanth refuses to answer the question of the witnesses.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment