அம்மா ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்..தம்பிதுரை விளக்கம்.

சென்னை :அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்….தம்பிதுரை விளக்கம்… அதிமுகவில் பிளவு என்பதே இல்லை என்றும் ஜெயலலிதா ஆட்சி இன்றும் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது என்றும் . அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆதரித்து வருகிறன்றனர் … Read more

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்; நிலம் கையகப்படுத்தி விரிவாக்க இயக்குநரிடம் ஆட்சியர் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்க முடிவெடுத்து அதற்கான நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டும், கையகப்படுத்தப்பட்டும் விமான நிலைய விரிவாக்க இயக்குனரிடம் ஆட்சியர் ஒப்படைத்தார். தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வகையில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக குமாரகிரி, கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் மற்றும் சேர்வைக்காரன்மடம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 600.93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது. அதன்படி 13 பகுதிகளாக … Read more

மனைவியை எரித்துக் கொன்ற கணவன் 17 வருடங்களுக்கு பின் நீதிமன்றத்தில் சரண்..!

மும்பை :17 வருடங்களுக்கு முன் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்  செய்த தவறுக்காக நேற்று திருந்தி மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  மகாராஷ்திரா மாநிலம் நாந்தேட் என்ற மாவட்டத்தின் அருகே வசித்து வந்த பிராஜி மேக்தார் கடந்த 2000-ம் ஆண்டில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீயிட்டு கொளுத்தி விட்டு  தலைமறைவானார்.  உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சைகாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி ஒரு சில தினங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் கடந்த 17 வருடங்களாக தலைமறைவாக இருந்த … Read more

சென்னை வீரர்களிடம் 100 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்: சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி

சென்னை:சென்னையின் எஃப்.சி. வீரர்களிடம் 100 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறேன் என அதன் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார். இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், வீட்டா டேனி ஆகியோர் கலந்துகொண்டு புதிய பயிற்சியாளரை … Read more

உலக ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அபய் சிங்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் அபய் சிங் 10-12, 11-7, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷமியைத் தோற்கடித்தார்.அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான அதியா ராகவன் 3-11, 11-8, 7-11, 11-4, 3-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் அலி ஹுசைனிடம் தோல்வி கண்டார்.

முதல் பயிற்சி ஆட்டத்தில் குல்தீப், ஜடேஜா அசத்தல்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினர். இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவனுடன் இந்திய அணி 2 நாள் போட்டியில் மோதுகிறது. கொழும்பு கிரிக்கெட் … Read more

TNPL டி20 தொடர் இன்று கோலாகல தொடக்கம்: பேட்ரியாட்ஸ் – டிராகன்ஸ் மோதல்

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் போட்டித் தொடரின் 2வது சீசன், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழக அளவில் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் மோதும் இந்த தொடர், கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகமாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் … Read more

இந்திய ரெயில்வேயின் உணவுகள் ‘மனிதர்கள் உண்ண தகுதியற்றவை’…. சி.ஏ.ஜி. பகீர் தகவல்..

டெல்லி:இந்திய ரெயில்வேயில் நாள்தோறும் 2.2 கோடி பயணிகள் பயணிக்கும் நிலையில், அதில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்ணத் தகுதியற்றவை என்று மத்திய தலைமைத் தணிக்கைக் குழு(சி.ஏ.ஜி.)அதிர்ச்சித் தகவல் வௌியிட்டுள்ளது.  74 ரெயில் நிலையங்கள், 80 ரெயில்களில் இந்த ஆய்வு மேற்கொண்ட சி.ஏ.ஜி. அமைப்பு இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது. மேலும், ரெயில்வே கேட்ரிங் சர்வீஸின் மோசமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டி உள்ள சிஏஜி, தரமற்ற உணவு, தரத்தில் சமரசம் ஆகியவற்றுக்கு வழிவகை செய்து உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரெயில்வேயின்  உணவுகள் சுகாதாரம் மற்றும் தரம் குறித்து சராசரி மற்றும் மோசமானது என்று 75 சதவித பயணிகள் உணர்கிறார்கள்.   சிஏஜி குழு … Read more

தென் கொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்குமாறு வட கொரியாவிடம் தென் கொரியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வட கொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு விடுத்தது. எனினும், … Read more