அம்மா ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்..தம்பிதுரை விளக்கம்.

அம்மா ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்..தம்பிதுரை விளக்கம்.

Default Image
சென்னை :அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்….தம்பிதுரை விளக்கம்…
அதிமுகவில் பிளவு என்பதே இல்லை என்றும் ஜெயலலிதா ஆட்சி இன்றும் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது என்றும் . அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆதரித்து வருகிறன்றனர் என்றும் தெரிவித்தார்.
 ஓ.பி.எஸ் அணியிலிருந்த கோவை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுகுட்டி யாருடைய நிர்பந்தத்தாலும் அங்கிருந்து வெளியேறவில்லை. என தெரிவித்த தம்பிதுரை ஜெயலலிதா ஆட்சியைக் காப்பாற்றவே ஆறுக்குட்டி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அதை நீங்கள் கர்நாடக அரசிடம் போய் கேளுங்கள் என தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கை வந்தபிறகு உண்மை தெரியவரும் என்றும் தம்பிதுரை கூறினார்.
Join our channel google news Youtube