உலக ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அபய் சிங்

உலக ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அபய் சிங்

Default Image

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் அபய் சிங் 10-12, 11-7, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷமியைத் தோற்கடித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான அதியா ராகவன் 3-11, 11-8, 7-11, 11-4, 3-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் அலி ஹுசைனிடம் தோல்வி கண்டார்.

Join our channel google news Youtube