தென் கொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்குமாறு வட கொரியாவிடம் தென் கொரியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வட கொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு விடுத்தது. எனினும், அதுகுறித்து வட கொரிய அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், வட கொரிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மூன் சங்-கியூன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
இரண்டு கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. 
கொரிய தீபகற்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டுமென்றால், அதற்கு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அத்தியாவசியமானது ஆகும் என்றார் அவர்.
வட கொரியாவுடனான பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் நடத்த தென் கொரிய செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment