மோசமான உடையில் ஒரு விழாவிற்கு வந்து சர்ச்சையில் சிக்கிய சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி ஒரு விழாவிற்கு  சென்ற போது  டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்து இருந்திருக்கிறார். நடிகை சமீரா ரெட்டி தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் “வாரணம் ஆயிரம்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கு ஒரு குழந்தையுள்ளது. இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் பெரிதாக நடிக்க வில்லை. இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா திரையுலகில் இயக்குனராக வளம் வரும் சமுத்திரக்கனி அவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றி வருகிறார். மதுரை செல்லூரில், சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், வாக்காளர்களாகிய நீங்கள் வெங்கடேசனை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். வாக்களித்து வெறி பெற வைத்தால், மிகப்பெரிய மாற்றத்தை அவர் கொண்டு வருவார். இதனால் அடுத்த தலைமுறை வளரும் என இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்விதுறை ஆசியர்களுக்கு அறிவுறுத்தல். பள்ளி செல்லும் மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து, ஜூன்-3ம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு சில உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரை வழங்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்களின் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகளில் கணினி வசதிகளை பயன்படுத்த ஏதுவாக … Read more

தமிழகத்தில் மட்டும் ரூ.472.67 கோடி பறிமுதல்

இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2426.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது தமிழகத்தை பொருத்தவரை  ஏப்ரல் … Read more

அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட … Read more

பல வருடங்களுக்கு பின்பு சினிமாவில் பிரபல நடிகருடன் நடிக்கும் ஷோபனா

நடிகை ஷோபனா 15வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தில் நாயகனாக சுரேஷ் கோபி நடிக்க இருக்கிறார். நடிகை ஷோபனா 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் ஒருவர். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இதையடுத்து நடிகை ஷோபனா பாரத நாட்டியத்தில் மிகவும் புகழ் பெற்றவர்.எனவே இவர் நடிப்பதை விட்டு விட்டு தற்போது … Read more

வேளாண் பட்டபடிப்புகளுக்கு தடை

வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்கத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை மானியக்குழு கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூரக்  கல்வி முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில்,  விதிமுறைகளின்படி, தொழில் சார்ந்த படிப்புகளான பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், ஆர்க்கிடெக்சர் போன்ற படிப்புகளைத்  தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது என பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்கத் … Read more

இன்று (ஏப்ரல் 12) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

இன்று  (ஏப்ரல் 12-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாளில் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்:                        … Read more

இன்று காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வருகை! பிரச்சாரத்தில் பங்கேற்பு

இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் … Read more

வெற்றிக்கு காரணம் இதுதான்: தல தோனி பேச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய தல தோனி கூறியதாவது… இந்த போட்டி நன்றாக அமைந்தது. ராஜஸ்தானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் ஒரு சில ரன்கள் குறைவாக எடுத்து விட்டனர் . ஆனால் நமது வீரர்கள் அற்புதமாக ஆடி வெற்றியை தேடித் தந்தனர். இந்த வெற்றிக்கு காரணம் கடைசியில் ஆடிய சென்னை பேட்ஸ்மேன்கள் … Read more