#Breaking:சற்று முன்…தொடங்கியது பொதுக்குழு கூட்டம்;ஒரே மேடையில் ஓபிஎஸ்,இபிஎஸ்!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில்,தாமதமானது.மேலும்,ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்,முழக்கங்கள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே,தாமதமாக வந்த இபிஎஸ் முதலாவதாக பொதுக்குழு மேடையில் ஏறிய நிலையில்,முதலாவதாக வருகை புரிந்த ஓபிஎஸ் இரண்டாவதாக மேடை ஏறினார்.

இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.இக்கூட்டத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் உட்பட சுமார் 2500 பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.இதற்கிடையில், ஓபிஎஸ்,இபிஎஸ் இருவருக்கும் நடுவில் உள்ள இருக்கையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார். கடந்த ஜூன் 14 தேதிக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர்.

இந்த வேளையில்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தீர்மானங்கள் மீது ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒற்றை தலைமையக எடப்பாடி பழனிசாமி தேர்வாகும் வரை பிற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை கொண்டு வராவிட்டால் 23 தீர்மானங்களில் கையெழுத்திட மாட்டோம் என ஈபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment