மோட்டோ ஜி6(Moto G6 & Moto E5) மற்றும் மோட்டோ இ5 விவரங்கள் கசிவு.!

 

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ‘எக்ஸ்டி1925-7″ என்ற குறியீட்டு பெயரிலும், அதன்பின்பு மோட்டோ இ5 ‘எக்ஸ்டி1924-3″ என்ற குறியீட்டு பெயரிலும் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை இந்தோனேஷியாவில் சான்றளிக்கும் வலைதளத்தில் கசிந்துள்ளது. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மேலும் மோட்டோ மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment